யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களாக அலைபேசிகளைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 43 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23,24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment