எமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் எனும் தொனிப் பொருளில் வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் வெண்கரம் அமைப்பினால் பாடசாலைத் தோட்டம் அமைக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சங்கானை, சண்டிலிப்பாய் கோட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான பாடசாலை தோட்டம் வழங்கும் செயற்பாடு சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில், வித்தியாலய அதிபர் பா. பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று முன்தினம் (04) திங்கட்கிழமை காலை 8 மணிக்கு இடம்பெற்றது.
பாடசாலை தோட்ட செயற்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்துவதனூடாக அவர்களை தத்தமது வீடுகளில் வீட்டுத்தோட்டச் செய்கைக்கு ஊக்கப்படுத்தல் என்பதை நோக்கமாகக் கொண்டு இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்றிட்டம் ஆரம்ப நிகழ்வில் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வெண்கரம் செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் பாடசாலைகளின் தோட்ட செயற்பாடுகளுக்கான நாற்றுகள், எரு, மண், பைகள் என்பவற்றை வலயக் கல்விப் பணிப்பாளர் தமது கைகளால் வழங்கி வைத்தார்.
இதன்போது அங்கு உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர்,
பாடசாலை தோட்டத்தினூடாக வீட்டுத்தோட்டம் அமைக்கும் செயற்பாட்டில் மாணவர்களிடையே சிறந்த பண்புகளை வளர்ப்பதை நோக்கமாக கொண்ட இச் செயற்றிட்டம் நாட்டின் இன்றைய சூழலுக்கு பொருத்தமானது. உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது.- என்றார்.
தொடர்ந்து வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தமதுரையில், பாடசாலைத் தோட்ட செயற்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலமே சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும். – என்றார். In my
Post a Comment