யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஆறு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளின் இலக்கம் தொடர்பில் தற்போது வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லை எனவே யாழ்ப்பாண நகரப் பகுதியில் சைக்கிள்களை பறிகொடுத்தவர்களை யாழ்ப்பாண பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் அறிவித்துள்ளார்கள்,
அத்தோடு நேற்று மதியம் யாழ் நகரப் பகுதியில் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் திருடப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த கடை ஒன்றின் சிசிடி கேமரா வின் உதவியுடன் சைக்கிள்திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவரிடமிருந்து 6 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment