"பொருளாதாரப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண்பேன். அதைத் தொடர்ந்து எனது பதவிக் காலத்துக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன்."
- இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஜனாதிபதித் தெரிவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தின் பிரகாரம், எத்தனை பேர் என்னை ஆதரிப்பார்கள், எத்தனைபேர் என்னை ஆதரிக்காமல் விட்டார்கள் என்ற விடயம் ஒருபுறம் இருக்கட்டும்.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்க் கட்சிகளையும், முஸ்லிம் கட்சிகளையும் இணைத்து ஆளும் தரப்புடன் பேச்சு நடத்தி ஒரு தீர்வை எனது பதவிக் காலத்தில் முன்வைத்தே தீருவேன். அதற்கு முன்னதாகப் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன். அதுதான் எனது முதல் இலக்கு" - என்றார்.
Post a Comment