கொழும்பு காலிமுகத் திடல் "கோட்டா கோ கம'வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன.
நள்ளிரவைத் தாண்டியதும் அதிகாலை 1.00 மணியளவில் படை நடவடிக்கை ஆரம்பமானது,
போராட்டக்காரர்களும் சில பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதிகள் கொண்டுவவரப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி செயலகப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது,
ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் காலிமுகத் திடல் பகுதிக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளர். பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
அதிகாலை முதல் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment