"இலங்கையில் ஏழைகளின் அழுகுரலைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்." இவ்வாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் ருவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் இலங்கை மக்களின் துக்கத்தில் என்னை இணைத்துக் கொள்கின்றேன்.
நாட்டின் ஆயர்களுடன் சேர்ந்து, அமைதிக்கான எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கின்றேன். ஏழைகளின் அழுகுரலைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அதிகாரம் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்" - என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment