குருநாகல் – யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் ஆலோசனையின் பிரகாரம், குறித்த இராணுவ அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
விடயம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாக்குதலுடன் தொடர்புடைய சிரேஷ்ட அதிகாரியின் நடத்தை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக படைத் தளபதியின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment