ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வானுார்தி தளத்தின் ஊடாக, நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் நேற்றைய இரவைக் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார்.
எனினும், தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளதாக ஏ.எஃப்.பி குறிப்பிட்டுள்ளது.
73 வயதான ஜனாதிபதி கோட்டாபய, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.
Post a Comment