அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரமே நிறுவனத்திற்கு அழைக்க வேண்டும் என்பதே தற்போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கை ஆகும். இந்த சுற்றறிக்கையே நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கிராம உத்தியோகத்தர்களும் வீட்டிலிருந்து பணி செய்ய தீர்மானித்துள்ளனர் என ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அதுல சீலமானாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கிராம உத்தியோகத்தர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக இன்று முதல் கடமை நிலையத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தவாறு கடமைகளை செய்ய குறித்த சங்கத்தினர் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment