தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை (21)
முதல்கட்டமாக குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் பின்வரும் அடிப்படையில் விநியோகிக்கப்படவுள்ளது என யாழ் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
பண்டத்தரிப்பு பல்நோக்கு
கூட்டுறவு சங்கம்
சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்
அளவெட்டி பலநோக்கு
கூட்டுறவு சங்கம்
யாழ்ப்பாணம் சரவணபவன்
எரிபொருள் நிரப்பு நிலையம்
யாழ் மாநகர பலநோக்கு கூட்டுறவுசங்கம்
யாழ்ப்பாணம் லிவர்பூல் எரிபொருள் நிரப்பு நிலையம்
நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கம்
வேலணை பல்நோக்கு கூட்டுறவுச்சங்கம்
மானிப்பாய் பலநோக்கு கூட்டுக்றவுசங்கம்
ராஜன் உமையாள் யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையம்
நல்லூர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம்
யாழப்பாணம் பல்நோக்கு கூட்டுறவு சங்கம்
கோப்பாய் ஏஎம்டி பல்நோக்கு கூட்டுறவுசங்கம்
மருதனார் மடம் சந்தி எரிபொருள் நிரப்பு நிலையம்
இலங்கை கூட்டுறவுசங்க சந்தைபடுத்தல் எரிபொருள் நிரப்பு நிலையம்
1.பெற்றோல் விநியோகம்
*மோட்டார் சைக்கிள்- ரூபா 1500/=
*முச்சக்கர வண்டி -ரூபா 2000/=
*கார்/வான் ரூபா 7000/=
பெற்றோல் விநியோகத்தின் போது வாகன பதிவு இலக்கத்தின் அடிப்படையில் கீழ்வருமாறு விநியோக ம் மேற்கொள்ளப்படும்.
*செவ்வாய் , சனி - 0,1,2
*வியாழன்,ஞாயிறு- 3, 4, 5
*திங்கள் புதன் வெள்ளி- 6,7,8,9
இதற்கு மேலதிகமாக QR code முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை யில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.எரிபொருள் விநியோக அட்டையில் குறிப்பிடப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு மேலதிகமாக ஏதேனும் எரிபொருள் நிலையங்களில் அவ் அட்டையைப் பயன்படுத்தி பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியும்.
2. டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பிரதேச செயலாளரின் மேற்பார்வையில் விநியோகிக்கப்படும்.
யாழ்ப்பாண பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் விற்பனை நிலையம் அத்தியாவசிய தேவைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் இவ் எரிபொருள் நிலையம் தவிர்ந்த ஏனைய எரிபொருள் நிலையங்களிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலும், தனியார் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கும் , பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை ஊடாக தொடர்ந்து வழமைபோன்று டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படும் .
பொதுமக்கள் வரிசையில் காத்திராது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் , விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக மேலான ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Post a Comment