புதிய அரசியல் கட்சியான 'மக்கள் போராட்ட பிரஜைகள்' கட்சியை பதிவு செய்யுமாறு போராட்டக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை தேர்தல்கள் ஆணையகம் நிராகரித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட கட்சியை தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் போராட்டக் குழுவினர் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான உரிய கடிதங்களை ஆணையகத்திடம் கையளித்தனர். புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment