காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கைது செய்யாதே கைது செய்யாதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாதே நிறுத்து நிறுத்து அடக்குமுறைகளை நிறுத்து வேண்டும் வேண்டும் ஜனநாயக உரிமை போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment