இலங்கை இந்தியா கலாச்சாரத்தின் அடையாளம் திருக்கேதீஸ்வர ஆலயம்! யாழ் இந்திய தூதுவர் நடராஜ் பெருமிதம் - Yarl Voice இலங்கை இந்தியா கலாச்சாரத்தின் அடையாளம் திருக்கேதீஸ்வர ஆலயம்! யாழ் இந்திய தூதுவர் நடராஜ் பெருமிதம் - Yarl Voice

இலங்கை இந்தியா கலாச்சாரத்தின் அடையாளம் திருக்கேதீஸ்வர ஆலயம்! யாழ் இந்திய தூதுவர் நடராஜ் பெருமிதம்



இலங்கை இந்தியா கலாச்சாரத்தின் அடையாளமாக மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயம் வழங்குவதாக யாழ் இந்திய துணை தூதுவர் கோபால் நடராஜ் ஜெபாஸ்கரன் தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தையொட்டி  அவர் வெளியிட்ட அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை இந்தியாவுக்கான கலாச்சார உறவுகள் மிகவும் தொன்மையானது.

அந்த வகையில் திருக்கேதீஸ்வர ஆலயத்தை புனரமைக்கும் முகமாக இந்திய அரசாங்கத்தினால் சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு எதிர்வரும் இன்று புதன்கிழமை 6ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் இடம் பெற உள்ளது.

 திருகேஸ்வரா ஆலயத்தை புனரமைக்கும் பணியில் இந்திய மாபல்லபுர சிற்பிகளும் இலங்கையைச் சேர்ந்த சிற்பிகளும்  இணைந்து கலாச்சார அடையாளங்களை முதன்மைப்படுத்தி சிலைகளாக வடித்துள்ளார்கள்.

திருக்கேதீஸ்வரா பெருமானின் மகா கும்பாபிஷேகத்தை காண்பதற்காக இலங்கை பக்தர்கள் எவ்வளவு ஆவலாக உள்ளார்களோ அதே போல இந்தியாவில் இருந்து பக்தர்களும் குருமார்களும் வருகை தருவார்கள் என நம்புகிறேன்.

ஆகவே திருக்கேதீஸ்வரன் அருளால்  அனைவரிடமும் அன்பும் அறமும் பெருகட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post