யாழ்ப்பாணத்தின் விபுலானந்தர் சிலை மற்றும் பாரதியார் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.
சுவாமி விபுலானந்தரின் 75 ஆவது குரு பூசை தினமான இன்று மாலை 3 மணி அளவில் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள சுற்றுவட்ட வளைவிலேயே இந்த சிலைகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சைவ மகாசபை மற்றும் யாழ் மாநகர சபை ஆகிய இணைந்து இந்த நிர்மாணப் பணிகளை
மேற்கொள்ளவுள்ளன.
இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், அகில இலங்கை சைவ மகா சபையின் தலைவர் பரா.நந்தகுமார், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment