வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அதனை முன்னிட்ட பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24.07.2022) காலை இடம்பெற்றது.
பாரம்பரிய முறைப்படி பெருந் திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங்கும் மரபு சார்ந்தோரிடம் கோவிலின் பிரதம குருக்களினால் கையளிக்கப்பட்டன.
Post a Comment