"புதிய ஜனாதிபதித் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் கட்சிகளும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று நம்புகின்றேன். மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேச்சுக்கள் தொடர்கின்றன."
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்வில் போட்டியிடவுள்ளேன்.
இது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. எனது கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரமே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
மோசடியாளர்களிடம் மீண்டும் நாட்டைக் கையளிக்க நான் விரும்பவில்லை.
மக்கள் போராட்டம் ராஜபக்சக்களை ஓட ஓட விரட்டியளித்துள்ளது. போராட்டக்காரர்கள் ஊழல், மோசடி இல்லாத புதிய ஆட்சியைக் கோரியே நிற்கின்றனர். அவர்களின் கோரிக்கைகளை எடுத்து நோக்கினால் எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
எனவே, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் புதிய ஜனாதிபதிக்கான தேர்வில் நான் போட்டியிடவுள்ளேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் கட்சிகளும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று நம்புகின்றேன். மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேச்சுக்கள் தொடர்கின்றன" - என்றார்.
Post a Comment