வடமாகாணத்தில் இருந்து முதன் முறையாக கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய இளைஞர் கலந்து கொள்கிறார்.
சிறுவயதில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய இந்த இளைஞர் பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய அணியின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தற்போதுதான் முதன்முறை போட்டியிடுவதாகவும், அதில் கலந்து கொள்ளும் முதலாவது தமிழ் இளைஞன் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து வருடமாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதுடன், மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தேசிய போட்டிகளில் வெற்றியையும் தனதாக்கி கொண்டுள்ளார்.
குறித்த இளைஞர், மானிப்பாய்
ஏஞ்சல் சர்வதேச பாடசாலையில் கல்விகற்றதுடன் இவருக்கான பயிற்சியாளராக ஆரம்பம் முதல் ஜெயபாலன் ஜெசந்தன் செயற்பட்டு வருகிறார்
Post a Comment