சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மீண்டும் மீண்டும் அலைக்களிக்கப்படுகின்றனர். சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாள்களாக இரவு பகலாக காத்திருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இதுவரை எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை. தாமதத்துற்கான காரணமும் கூறப்படவில்லை.
சுகாதாரப் பணியாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இதேபோன்று சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக காத்திருக்க வைக்கப்பட்டனர்.
இவ்வாறே, நேற்று வெள்ளிக்கிழமை எரிபொருள் வரும் என எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்த பணியாளர்கள் எரிபொருள் இன்றி இரவு நேரம் வீடுகளுக்கு திரும்பினர்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போன்றோரின் சிறந்த திட்டமிடல் இதில் வெளிப்படுகின்றது.
சொந்த திணைக்கள உத்தியோகத்தர்களின் நலன்களிலேயே சிறந்த திட்டமிடலுடன் பணியாற்றாமல் அத்தியாவசிய பணியாளர்களான அவர்களை அலைக்களிக்கும் இவர்கள் எப்படி இலட்சக்கணக்கான மக்கள் விடயத்தில் உரிய திட்டமிடல்களுடன் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள்?
சாதாரணமாக ஒரு பெற்றோல் விநியோகத்தையே சீராக செய்ய முடியாத, இவர்களின் நிர்வாகத் திறமை அற்ற தன்மையை, இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
Post a Comment