" முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் பதுங்கி -தலைமறைவாகவில்லை , அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர், வரும் திகதி, விவரம் குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தகவல் வெளியிட்டார்.
அதேவேளை, புதிய அரசின் இடைக்கால பாதீடு அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும், சர்வக்கட்சி அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் பிரகாரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment