கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் பிரதமர் அலுவலகம் - Yarl Voice கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் பிரதமர் அலுவலகம் - Yarl Voice

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் பிரதமர் அலுவலகம்




பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாகப் பதவி விலகக் கோரி கொழும்பு - கொள்ளுப்பிட்டி - ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிற்பகல் வேளையில் பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களைக் கலைக்கப் பொலிஸார் பல தடவைகள் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமர் அலுவலகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை ஆகியவையும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post