எரிபொருள் பற்றாக்குறையினால் பல்வேறு தேவைகளுக்காக கொழும்புக்கு வர முடியாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களிலேயே முடங்கியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாவர். இவர்கள் அண்மைய நாட்களில் மிகக் குறைவான நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
சில எம்.பி.க்கள் கடந்த சில நாட்களாக நண்பர்களின் வாகனங்களிலும், பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்திலும் நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.
இதேவேளை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டிகளை போக்குவரத்துக்கு சாதனமாக பயன்படுத்துகின்ற போதிலும், தமது பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக துவிச்சக்கர வண்டியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வருவதற்கான எரிபொருள் விலை அதிகரிப்பினால் 50,000 ரூபாவுக்கு மேல் செலவாகிறது எனவும், அதிக எரிபொருள் விலையை தங்களின் பொருளாதார பிரச்சினையில் தாங்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Post a Comment