கோட்டாபயவை விட, ரணில் கடுமையான முடிவுகளை எடுக்கும் நபர் என்பது முழு நாடும் புரிந்துகொண்டுள்ளது - கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவிப்பு.
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவான, கொடூரமான தாக்குதல் எனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்விதமாக போராட்டத்தை அடக்க கோட்டாபய ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம் இருந்தது. எனினும் அவர் அப்படி செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 24 மணி நேரம் கடந்து வருகிறது. எனினும் இதுவரை சர்வதேசத்தின் சரியான வரவேற்பும் கிடைக்கவில்லை.
பொது மக்களின் போராட்டத்தை ஆயுத பலத்தில் அடக்க இடமளிக்க வேண்டாம் என அண்மையில் சர்வதேசம், அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.
அரசாங்கத்திற்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தது. அப்படியான சந்தர்ப்பத்தில், நிராயுதப்பாணிகளாக ஜனநாயக கோரிக்கைகளை விடுக்கும் போராட்டகாரர்கள் மீது ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இரவில் பயங்கரவாதிகளை அடக்கும் விதத்தில் தாக்குதல் நடத்தியது இழிவானது.
இந்த விதத்தில் மக்கள் போராட்டத்தை அடக்க கோட்டாபய ராஜபக்சவுக்கு இயலுமை இருந்தது. எனினும் அவர் அப்படி செய்யவில்லை.
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்சவை விட கடுமையான முடிவுகளை எடுக்கும் நபர் என்பது முழு நாடும் புரிந்துகொண்டுள்ளது எனவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.
Post a Comment