பாக்கிஸ்தானில் நடைபெற்ற 3 ஆவது சவாட்(savate) சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கும் வட மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த போட்டியில் இலங்கையிலிருந்து மொத்தமாக 13 பேர் (4 ஆண்கள், 9 பெண்கள்) போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
குறித்த போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணத்தை சேர்ந்த வவுனியா வீராங்கனை டிலக்சினி கந்தசாமி சிறப்பாக போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டிலக்சினி கந்தசாமி பெரும் கஷ்டத்திற்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியாலும் தொடர் பயிற்சியாலும் தங்கப் பதக்கத்தினை வென்று சர்வதேசத்தில் தமிழ் இளைஞர், யுவதிகளாலும் சாதிக்க முடியும் என முன்மாதிரியாக விளங்கியுள்ளார்.
இவர் பிரதேச, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல பதக்கங்களை வென்றுள்ளதுடன் இம்முறை சர்வதேச ரீதியிலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதோடு சப்ரகமுவ பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டி ஜூன் மாதம் 27 இல் இருந்து ஜூலை 03 வரை நடைபெற்றதுடன், அவர்களில் ஒன்பது பேர் தங்க பதக்கத்தினையும் நான்கு பேர் வெள்ளி பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளன.
Post a Comment