யாழ்ப்பாண வணிகர் கழகத்தினருக்கும் யாழ் மாவட்ட செயலாளருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் இடம்பெற்றது.
இதன்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற எரிபொருள் நெருக்கடி தொடர்பாகவும் அதனை பெற்றுக்கொள்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்ற பொழுது பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தற்போது குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை மிகவும் சொற்பம் எனவும் இதனை வைத்துக் கொண்டு பொருட்களின் விலையைக குறைக்க முடியாது எனவும் எரிபொருளின் விலையை 100 ரூபாயிலிருந்து வரை குறைக்க வேண்டும் என்றும் இதன்போது வணிக கழகத்தின் தலைவர் த.ஜெயசேகரம் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் தற்போதைய எரிபொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் பட்சத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையினை குறைப்பதற்கும் அது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்.
Post a Comment