அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 12 பேர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணி மீது கொழும்பு - யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்துப் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த அமைதியின்மையைத் தொடர்ந்து வசந்த முதலிகே உள்ளிட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பேரணியில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பியபோது, கொழும்பு - ஐந்துலாம்பு சந்தியில் வைத்து வசந்த முதலிகே கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
அவரின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வசந்த முதலிகேவைக் கைதுசெய்யுமாறு ஏற்கனவே நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment