தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகள் யாழில் கௌரவிப்பு..!! - Yarl Voice தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகள் யாழில் கௌரவிப்பு..!! - Yarl Voice

தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகள் யாழில் கௌரவிப்பு..!!



வென்மேரி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்துக் கெளரவிக்கும் வென்மேரி விருதுகள்-2021-2022 வழங்கும் விழா இன்று புதன்கிழமை (17) பிற்பகல் யாழ்ப்பாணம் நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் மேற்படி அறக்கட்டளையின் தலைவர் வென்சிலாஸ் அனுரா தலைமையில் நடைபெற்றது.

மேற்படி விழாவில் பேராளுமை விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், பல்துறைசார் ஆளுமை விருதுகள், இளையோர் ஊக்குவிப்பு விருதுகள் எனப் பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

பேராளுமை விருதுகள் பிரிவில் 
சுவாமி விபுலானந்தர் அடிகள் ஞாபகார்த்த விருது
வேலாயுதபிள்ளை அருளானந்தம் அவர்களுக்கும் தமிழ்த்தாத்தா 
கந்த முருகேசனார் ஞாபகார்த்த விருது பண்டிதர்.வீ.பரந்தாமன் அவர்களுக்கும்  பேராசிரியர் க.கைலாசபதி ஞாபகார்த்த விருது ஐயாத்துரை சாந்தன் அவர்களுக்கும் மகாவித்துவான் பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர் ஞாபகார்த்த விருது முத்துக்குமாரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் ஓவியமேதை மாற்கு  மாஸ்டர் ஞாபகார்த்த விழுது வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் பிரிவில் கவிஞர் இ.முருகையன் ஞாபகார்த்த விருது கவிஞர் 
சோ.பத்மநாதன் அவர்களுக்கும் மொழியியல் பேராசிரியர் சுசீந்திரராஜா ஞாபகார்த்த விருது முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுக்கும் 
புலவர்மணி ஆ.மு.செரிபுத்தீன் ஞாபகார்த்த விருது பாலமுனை பாறூக் அவர்களுக்கும் குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவக் கலாநிதி சிவபாதசுந்தரம் ஞாபகார்த்த விருது மருத்துவர் கலாநிதி கனகராஜா நந்தகுமார் அவர்களுக்கும் அமரர் தராகி சிவராம் ஞாபகார்த்த விருது பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களுக்கும் விளையாட்டுத்துறை நீச்சல் வீரர் அமரர் நவரட்ணசாமி ஞாபகார்த்த விருது மரியதாஸ் தொபியாஸ் அவர்களுக்கும் அமரர் கலையரசு சொர்ணலிங்கம் ஞாபகார்த்த விருது இராசையா பீதாம்பரம் அவர்களுக்கும் குறமகள் வள்ளிநாயகி ஞாபகார்த்த விருது கோகிலா மகேந்திரம் அவர்களுக்கும் கவிஞர் பா.சத்தியசீலன் ஞாபகார்த்த விருது 
வண.பிதா.செ.அன்புராசா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

வென்மேரி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலாவது தடவையாக இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post