இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கைக்கு வருவது உறுதி என்று வெளிவிவகார அமைச்சரும் கோட்டாபயவின் சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
"கோட்டாபய நாடு திரும்புவதில் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக எந்த ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் இராஜதந்திர மார்க்கமாக நாடு திரும்புவார். அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியவாறு பயணம் செய்யலாம்" - என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறினார்.
இதேவேளை, கோட்டாபயவின் உறவினரான உதயங்க நேற்றுமுன்தினம் இதே தகவலை வெளியிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment