மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் 58 பேரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக சர்வதேச நீதி அமைப்பைப் பயன்படுத்துமாறும் ஐ.நா. உறுப்புரிமையிலுள்ள 47 நாடுகளின் தலைவர்களிடம் மிச்சேல் பச்லெட் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட 58 இராணுவத்தினரையும் கைதுசெய்ய இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே, அவர்களைக் கைதுசெய்ய சர்வதேச நீதி அமைப்பை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இலங்கை இராணுவ அதிகாரிகள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment