புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது பொதுச்சபை கூட்டம் இன்றைய தினம் இணுவில் பகுதியிலுள்ள தனியார் மண்டபமொன்றில் சுந்தரம் அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி அக்கட்சியின் தலைவராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் செயலாளராக நா.இரட்ணலிங்கமும்
பொருளாளராக க.சிவநேசனும்
ஊடகப் பிரிவின் தலைவராக பா.கஜதீபனும் சர்வதேச பேச்சாளராக செ.ஜெகநாதனும் தெரிவாகினர்.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளில் இயங்குபவர்கள் உட்பட145 பேராளர்கள் வரை கலந்து கொண்டிருந்ததுடன் தீர்மானங்களும் எட்டப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாடு நாளைய தினம்(07) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா ஹம்சிகா மண்டபத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
கட்சியின் தேசிய மாநாட்டில் சகோதர கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
Post a Comment