அரியாலை கில்லாடிகள் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் - Yarl Voice அரியாலை கில்லாடிகள் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் - Yarl Voice

அரியாலை கில்லாடிகள் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார்




அரியாலை கில்லாடிகள் 100 நடாத்திய முதலாவது பருவகால தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது.
இப் போட்டியில் போட்டியில் பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார், தமிழ் ஸ்ரார் டொட்மொன்ட் அணிகள் மோதிக் கொண்டன.
அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் JZ தமிழின் அனுசரணையுடன் ஏ.கே.எஸ்.எல் குழுபத்தின் தலைவர் என்.சுதேஸ்குமார் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற இவ்விறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பனர் செல்வம் அடைக்கலநாதனும், கௌரவ விருந்தினராக யாழ்.மானநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மேலும் சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தியாகராஜா நிரோஸ், யாழ்.மாநகர பிரதி முதர்வர் ரி.ஈசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதன் படி முதலில் தமிழ் ஸ்ரார் டொட்மொன்ட் அணியினர் துடுப்பெடுத்தாட மைதானத்திற்குள் நுழைந்தனர்.
 
ஆரம்பத்தில் சிறிது தடுமாறிய துடுப்பெடுத்தாடிய சீரான இடைவெளியில் விக்கெட்டுக்ளை இழந்திருந்தனர். இருப்பினும் பின்வரிசை ஆட்டக்காரர்களின் உதவியுடன் 10 ஓவர்கள் முடிவில் 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
 
68 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியினரும் ஆரம்பத்தில் தடுமாறிய போதும், நடு வரிசை ஆட்டக்காரர்களின் உதவியுடன் வெற்றி இலக்கை எட்டியிருந்தனர்.
 
இதன்படி அரியாலை கில்லாடிகள் 100 நடாத்த்திய முதலாவது பருவகால தொடரின் (ஏ.கே.எஸ்.எல்) முதலாவது வெற்றிக் கிண்ணத்தை பொயின்பெற்றோ பீனிக்ஸ் ஸ்ரார் அணியினர் தனதாக்கிக் கொண்டனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post