யாழ் புனித சென் ஜேம்ஸ் மகளிர் பாடசாலை ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்து இருந்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் தொழிற்சங்க வாதியுமான ஜோசப் ஸ்டாலின் கைதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கோரியும் இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் மேற்கொண்டிருந்தனர்.
ஆசிரியர் சங்கத் தலைவரின் கைதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் முன்னால் ஆசிரியர் சங்கத்தினர் இன்று காலை போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment