அதிக கட்டணம் அளவிட்ட பாதுகாப்பு நிலையத்தை பூட்டிய மாநகரசபை - Yarl Voice அதிக கட்டணம் அளவிட்ட பாதுகாப்பு நிலையத்தை பூட்டிய மாநகரசபை - Yarl Voice

அதிக கட்டணம் அளவிட்ட பாதுகாப்பு நிலையத்தை பூட்டிய மாநகரசபை



நல்லூர் உற்சவகாலத்தை முன்னிட்டு பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வாகனப் பாதுகாப்பு நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து அதிக பணம் அறவிடப்படுவதாக யாழ்.மாநகர சபைக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அதனை உரிய முறையில் கண்காணித்து குறித்த விடயம் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டது. 

இந் நிலையில் இன்று குறித்த வாகனப் பாதுகாப்பு நிலையம் யாழ்.மாஏநகர சபையினால் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிக கட்டணம் அறவிட்டமையால்  யாழ்.மாநகர சபையினால் பூட்டப்பட்டது.

துவிச்சக்கர வண்டிக்கு 20 ரூபாவும் மோட்டார் சைக்கிளுக்கு 30 ரூபாவும் முச்சக்கரண வண்டி மற்றும் கார்; ஆகியவற்றுக்கு 50 ரூபாவும் வானுக்கு 100 ரூபா எனவும் யாழ்.மாநகர சபையினால் கட்டண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் நிர்ணய கட்டணங்களுக்கு அதிகமான கட்டணங்களை அறவிடுதல் மற்றும் மாநகர சபையின் அங்கீகாரம் பெறாத சிட்டைகளை வழங்குதல் ஆகியவை கண்டறியப்பட்டால் அவ் வாகனப் பாதுகாப்பு நிலையங்கள் உடன் மூடப்படும் என்று யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post