இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழ் இந்து மகளீர் கல்லூரி ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது பாடசாலையின் முன்னாள் ஒன்று கூடிய ஆசிரியர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டிக்கும் வாசகங்களை கொண்ட பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள்
தாங்கியிருந்தனர்.
Post a Comment