அமைச்சர் பந்துல யாழிற்கு விஜயம் - Yarl Voice அமைச்சர் பந்துல யாழிற்கு விஜயம் - Yarl Voice

அமைச்சர் பந்துல யாழிற்கு விஜயம்



போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  பந்துல குணவர்த்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வந்துள்ளார். 

கொழும்பு - யாழ்ப்பாணம் புகையிரத சேவையில் இன்றைய மதியம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை - கொழும்பு புகையிரத சேவையை மேம்படுத்துவது, மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்துடன், இரவு தபால் சேவையின் மீள் ஆரம்பம், அறிவியல் நகர், சாவகச்சேரி நிலையங்களில் உத்தரதேவி ரயில்சேவை தரித்து நிற்கும்  என இந்த சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post