யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்குப் பகிடிவதைக் குற்றச்சாட்டுக் காரணமாக மறு அறிவித்தல் வரையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் ஒருவரைப் பல்கலைக்கழக வாயிலில் வைத்துக் கடந்த 2ஆம் திகதி இவர்கள் தாக்கினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இருவருக்கும் மறு அறிவித்தல் வரையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும், விடுதிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment