பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை - கோட்டா விளக்கம் - Yarl Voice பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை - கோட்டா விளக்கம் - Yarl Voice

பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை - கோட்டா விளக்கம்



"அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பது தொடர்பில் நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில், எனக்குப் பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் யார் முடிவு எடுத்தது?"

- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. 

"நான் பதவி ஆசை பிடித்தவன் என்றால் ஜனாதிபதிப் பதவியிலிருந்தே விலகியிருக்கமாட்டேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று ஆர்வம் காட்டி வருகின்றது எனவும், குறித்த கட்சியின் பிறிதொரு குழு தினேஷ்  குணவர்த்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றது எனவும் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்படி விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

"எனக்கு மட்டுமல்ல ராஜபக்ச குடும்பத்தில் எவருக்கும் பதவி ஆசை இல்லை. மக்களின் அமோக ஆணையுடன்தான் ராஜபக்சக்கள் பதவிக்கு வந்தார்கள். இதனை எதிரணியினரும், தாங்கள் நினைத்த மாதிரி செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது பிரதமர் பதவி வகிக்கும் தினேஷ் குணவர்த்தன அந்தப் பதவிக்குரிய முழுத் தகுதிகளையும் கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த அரசியல்வாதிகளுள் அவர் முக்கியமானவர்" - என்றும் கோட்டாபய மேலும் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post