சவுக்கு மரங்களை கடந்த முயன்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரால் இருவர் கைது - Yarl Voice சவுக்கு மரங்களை கடந்த முயன்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரால் இருவர் கைது - Yarl Voice

சவுக்கு மரங்களை கடந்த முயன்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரால் இருவர் கைது



மணற்காடு சவுக்கம்காட்டில் சவுக்கு மரங்களை பச்சையாக வெட்டி கடத்த முற்பட்ட சமயம் ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிசார்  தெரிவித்தனர். 

மணற்காடு சவுக்கங்காட்டில் முழு மரமாக சவுக்கம் மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று வியாழக்கிழமை(29) முற்பகல் காட்டுப் குதியினை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிசார் சுற்றி வளைத்த போது சவுக்கு மரங்களை முழு மரங்களாக வெட்டி கடத்த முற்பட்ட சமயம் ஏழு துவிச்சக்கர வண்டிகள் மீட்டுள்ளனர். 

சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post