நாளை ( 05.09.2022 ) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 100 முதல் 200 ரூபாய் வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 2 மாதங்களில் லிட்ரோ குறிப்பிடத்தக்க இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் லிட்ரோ நிறுவனத்தின் இலாபம் 700 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் உணவு மற்றும் பானங்களின் விலையை குறைக்க முடியாது என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இன்று தெரிவித்துள்ளார்.
Post a Comment