நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் கட்சிகளின் ஒன்றியத்தால் ‘மேலவை இலங்கை கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், புதிய கூட்டணியின் கொள்கைப் பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, புதிய ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ, யுதுகம, விஜயதரணி அமைப்பு என்பன கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
இந்தக் கூட்டணியின் தலைவராக விமல் வீரவன்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment