நினைவேந்தல் செய்ய தற்போது முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள்?? சிந்திக்க வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம் - Yarl Voice நினைவேந்தல் செய்ய தற்போது முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள்?? சிந்திக்க வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம் - Yarl Voice

நினைவேந்தல் செய்ய தற்போது முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள்?? சிந்திக்க வேண்டும் என்கிறார் சிவாஜிலிங்கம்



தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடமாகண சபை முன்னாள் உறுப்பினர் 
எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே 
எம் கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தல்களில் பொதுவாக அனைவரும் இணைந்து அஞ்சலி செலுத்த வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு தியாக தீபம் தீலீபனின் நினைவேந்தலுக்கு காகம் கூட பறக்கவில்லை.

அப்போது நான் கோண்டாவில் பகுதியில் நினைவேந்தலை மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் கோப்பாய்
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்பாட்டில் இல்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் 
இவ்வாறான நினைவேந்தலை முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், தமிழ் உணர்வாளர்கள் என அனைவரும் ஏட்டிக்கு போட்டியாக இல்லாமல் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக அனுஷ்டிக்க வேண்டும் - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post