ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் நேரில் அஞ்சலி - Yarl Voice ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் நேரில் அஞ்சலி - Yarl Voice

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் நேரில் அஞ்சலி



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்கின்றார்.  

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்ஷோ அபே கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த நாட்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுக்கு ஏனைய கடன் வழங்குநர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்க ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்று முன்னதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post