வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் - Yarl Voice வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் - Yarl Voice

வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்



வரலாற்றுப் பிரசித்திபெற்ற  யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்றைய தினம்(24) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கிரிஜைகள், வசந்தமண்டப பூஜை என்பன இடம்பெற்று 8.45 மணிக்கு  கொடியேற்றம் மிகச்சிறப்பாக  இடம்பெற்றதுடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார் ஆலய உள்வீதியில் வலம்வந்தார்.

ஒக்டோபர் 1ம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும் ஒக்டோபர் 2ம் திகதி வெண்ணைத் திருவிழாவும் 
ஒக்டோபர் 3ம் திகதி துகில் திருவிழாவும் ஒக்டோபர் 4ம் திகதி
பாம்புத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

கம்சன் போர்த்திருவிழா ஒக்டோபர் 5ம் திகதியும் வேட்டைத்திருவிழா ஒக்டோபர் 6ம் திகதியும் சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ம் திகதியும் தேர்த்திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதி காலையும் அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post