சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் இன்று (25) காலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, டிப்பர் வாகனத்தில் மரக்குற்றிகளை ஏற்றி அதன் மேல் கற்களை பரவி மறைத்து எடுத்து வந்தபோதே மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன் டிப்பரை செலுத்திவந்த சாரதியும் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Post a Comment