பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து முகமாலை நோக்கி சென்றுகொண்டிருந்த மனிதாபிமான கன்னிவெடி அகற்றும் பிரிவினரின் பேரூந்து பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி தள்ளியுள்ளது.
முகமாலையில் அமைந்துள்ள மனிதாபிமான கன்னிவெடி அகற்றும் பிரிவினரின் halo trust நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி வந்த பேரூந்து திரும்ப முற்பட்ட வேளையே சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 10 பேருமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment