உலக அழகிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை - Yarl Voice உலக அழகிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை - Yarl Voice

உலக அழகிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை



80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கும் 'Miss Tourism World 2022 இறுதிப் போட்டிகள்  இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 80 போட்டியாளர்கள் டிசம்பர் 8 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் இலங்கையில் தங்குவார்கள், மேலும் அவர்கள் 80 சிறிய போட்டிகளில்  பங்கேற்ற பிறகு இறுதிப் போட்டி நடைபெறும்.

அந்த இரண்டு வாரங்களில் கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, ஹபரணை, எல்ல, அறுகம்பே, மிரிஸ்ஸ மற்றும் காலி ஆகிய இடங்களுக்குச் செல்வார்கள்.

 இதன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என 'மிஸ் டூரிசம் வேர்ல்ட் 2022' இன் தேசிய பணிப்பாளர் மலித் ரணசிங்க தெரிவித்தார்.

இதனை வெற்றியடையச் செய்ய அரசாங்கம் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளனர் என்றும், கடந்த 74 ஆண்டுகளில் உலக அளவில் நடைபெற்ற முதல் ஐந்து போட்டிகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post