திருமாவளவனை சந்தித்த சிறீதரன் எம்பி! - Yarl Voice திருமாவளவனை சந்தித்த சிறீதரன் எம்பி! - Yarl Voice

திருமாவளவனை சந்தித்த சிறீதரன் எம்பி!



விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், எழுச்சித் தமிழன் தொல்.திருமாவளவனை, நேற்றைய தினம் (2022.10.18) அவரது சென்னை அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

இந்திய மக்களவை உறுப்பினராக இருந்துகொண்டு ஈழத்தமிழர் நலன்சார் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தொல்.திருமாவளவன் அவர்களோடு நடைபெற்ற மேற்படி சந்திப்பில், ஈழத்தமிழர் நலனோம்புகைச் செயற்பாடுகள், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு, அந்நிலைப்பாட்டை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு நிலத்திலும், புலத்திலும் மேற்கொள்ள வேண்டிய எத்தனங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், நீண்டகாலத்தின் பின் நடைபெற்ற இச் சிநேகபூர்வமான சந்திப்பு தன்னளவில் நிறைவானதாக அமைந்திருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post