ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு..! - Yarl Voice ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு..! - Yarl Voice

ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு..!



யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதன் போது மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர்களான கு. செல்வக்குமார் மற்றும் த. வினோஜித் ஆகியோர் திருவுரு படத்திற்கு அணிவித்தனர். 

அதனை தொடர்ந்து, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post