யாழ். பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டில் முதல் பெண்மணியான ஜனாதிபதியின் மனைவி - Yarl Voice யாழ். பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டில் முதல் பெண்மணியான ஜனாதிபதியின் மனைவி - Yarl Voice

யாழ். பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டில் முதல் பெண்மணியான ஜனாதிபதியின் மனைவி



'புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல்' என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தால் 'பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்' என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு இன்று கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் தலைமையில் ஆரம்பமான இந்த ஆய்வு மாநாட்டில் இலங்கையின் முதல் பெண்மணியும் களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க கலந்துகொண்டு முதன்மை உரை ஆற்றினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post