யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலை பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment