ஊர்காவற்றுறை - கரம்பொன் பகுதியில் நான்கு வயதுச் சிறுமியை மூர்க்கத்தனமாகத் தாக்கி சித்திரவதை செய்த தந்தை இன்று காலை யாழ் நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி தாக்கப்பட்டமை மற்றும் தாய் கொலை செய்யப்பட்டமை போன்று அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியாகிய நிலையில் ஊர்காவற்றுறை நீதிவானின் உத்தரவுக்கு இணங்க ஊர்காவற்றுறை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் இன்று (12) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது மனைவியுடன் முரண்பட்டு மகளைத் தாக்கி காணொளி எடுத்தார் எனவும் அது மனைவியின் தொலைபேசியில் இருந்து அவரது நண்பிக்கு அனுப்பப்பட்ட நிலையில் வெளியே வந்தது என அவர் விசாரணையில் தெரிவித்தார் எனக் கூறப்படுகின்றது.
சந்தேக நபர் திருமணமாகி மூன்று வருடங்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே மனைவியின் வீட்டிற்கு சென்று மனைவியையும் மகளையும் அழைத்துச் சென்றார் எனவும் மனைவியையும் மகளையும் சித்திரவதை செய்தார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட தாயும் மகளான சிறுமியும் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறுவர் பெண்கள்
அமைப்புக்கள் மௌனம்?
இதேவேளை. குறித்த சிறுமி தாக்கப்பட்டமை மற்றும் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக இதுவரை எந்தவொரு பெண்கள் மற்றும் சிறுவர் அமைப்புக்களும் குரல்கொடுத்திருக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் பெண்கள், சிறுவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்கள் இருக்கின்ற போதிலும் இந்த விடயத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன எனவும் கேள்வி எழுபப்ப்பட்டுள்ளது.
Post a Comment